ஊரே சிவராத்திரியில் மோட்சம் தேடி எங்க ஊரு சிவன் கோவிலில் தஞ்சம் அடைந்திருந்தது. வயசு வித்தியாசமின்றி அத்தனை பேரும் அன்று கோவில் வளாகத்தில் தங்கி சிவ பாடல்கள் பாடி விரதம் இருந்தார்கள். மதியத்துக்கு மேல் தொடங்கிய பக்தர்களும், பஜனை கோஷங்களும் சிவன் கோவிலை அதிரவைத்து கொண்டிருந்தது. சில வயதானவர்கள், நோயாளிகள் மட்டுமே தெரு வாசலில் உட்கார்ந்து சிவராத்திரி விழா கோலத்தை கண்ணால் பார்த்தும், கோஷங்களை காதால் கேட்டும் பொழுதை போக்கி கொண்டு இருந்தனர்.