இந்த விடுமுறையில் வழக்கம் போல் சித்தி வீட்டுக்கு போன போதும் அதே மாதிரி தான் சித்தி மகள் தங்கை சுபா நடந்து கொண்டாள். எனக்கு அது புரியாத புதிராகத்தான் இருந்தது. இதெல்லாம் இப்போது அவள் டீன் ஏஜ் வயதில் கல்லூரிக்குள் நுழைந்த பிறகு தான் இந்த அதிரடி அதிசய மாற்றத்தை அவளிடம் காண்கிறேன். இதற்கு முன்பு அவளே போன் போட்டு அண்ணா எப்போ வெகேஷனுக்கு வர்றே. சீக்கிரம் பெரியம்மாவோட கிளம்பி வா. எனக்கு லீவ் விட்டாச்சு. பெங்களூர் கிளைமேட் சூப்பரா இருக்கு. நல்ல ஜாலியா ஊர் சுத்தலாம். என்னோட ஃப்ரெண்ட்சை எல்லாம் உனக்கு இன்ட்ரோ பண்ணி விடுறேன். லெட் அஸ் என்ஜாய் அவர் வெகேஷன் அண்ணா என்று போனில் வாய் நிறைய பேசி விடுமுறைக்கு வர வேண்டி விரும்பி அழைப்பாள்.