இப்போ எனக்கு கல்யாணம் ஆகி குழந்தைகள் இருக்கிறது. இந்த சம்பவம் நான் பள்ளியில் படிக்கும்போது நடந்தது. அப்போது நான் ரொம்ப துறுதுறுப்பான பள்ளி பருவ பெண். படிப்பை தவிர மற்ற விளையாட்டு, என்எஸ்எஸ் போன்ற சோஷியல் ஆக்டிவிட்டியில் ஈடுபாடு அதிகம். அப்படி பள்ளியில் படிக்கும் போது எந்த வாய்ப்பு வந்தாலும் முன்னாடி போய் நிற்பேன். பள்ளியிலும் அது மாதிரி விஷயங்களுக்கு என்னை தான் தேடுவார்கள். மேலும் பெரிய படிப்பாளியாக இல்லாவிட்டாலும் அனைத்து ஆசிரியர்களுக்கும் என்னை மிகவும் பிடிக்கும். என்னோடு ஃபிரெண்ட்லியாக பழகுவார்கள்.