நான் காலையில் எழுந்து அன்று எங்களின் யுனிவர்சிட்டி வாலிபால் மேட்சுக்கு நண்பர்களிடம் பேசி தயார் ஆக சொல்லி கொண்டு இருக்கும் போதே அண்ணி தட்டில் காலை டிபனோடு ரூமுக்குள் நுழைந்தாள். ஆனால் வரும் வழியில் நான் பேசியதை கவனித்தாலோ என்னவோ தயங்கியபடி, தம்பி இன்னைக்கு உங்களோட வாலிபால் செமி ஃபைனலா என்றாள். ஆமா அண்ணி, பிளெஸ் பண்ணுங்க இன்னைக்கு ஜெயிச்சே ஆகணும் என்றேன்.