அன்று விடுமுறை நாள். அவசர வேலையாக அலுவலகத்திற்கு சென்று கதவை திறந்த போதே செல்வி வேகமாக ஓடிவந்து, சார் இன்னைக்கு ஆபீஸ் உண்டா. கொடுங்க நான் திறக்கிறேன். போட் கூட்டி பெருக்கி, தண்ணி எடுத்து வச்சிடுறேன் என்று சொல்லி வாஞ்சையோடு என்னிடம் அலுவலக சாவியை வாங்கி அவளே திறந்தாள். நானும் அவளிடம் சாவியை கொடுத்துவிட்டு, பக்கத்தில் உள்ள டீகடைக்கு சென்று டீயை ஆர்டர் சொல்லி விட்டு தம் பத்தவைத்தேன்.